Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரேவன்சா டெவலப்பர்ஸ் அம்பாசிடரானார் ரவி மோகன்

ரேவன்சா டெவலப்பர்ஸ் அம்பாசிடரானார் ரவி மோகன்

இக்குழுமம் தொழிற்சாலை குத்தகை, ரியல் எஸ்டேட், நகை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னையைச் சேர்ந்த ரேவன்சா குழுமத்தின் (Revanza Group) ரியல் எஸ்டேட் பிரிவான ரேவன்சா டெவலப்பர்ஸ் (Revanza Developers), தனது நிறுவன அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதுடன், நடிகர் ரவி மோகனை நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையவுள்ள ‘பார்ச்சூன் கிரீன்ஸ்’ (Fortune Greens) திட்டத்தைத் தனது முதல் உத்தேச குடியிருப்பு மனை மேம்பாட்டுத் திட்டமாகவும் நிறுவனம் அறிவித்தது.

ரேவன்சா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுஷில் லால்வானி, நிறுவனத்தின் புதிய பயணத்தைத் தொடங்கி வைத்தார். இக்குழுமம் தொழிற்சாலை குத்தகை, ரியல் எஸ்டேட், நகை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது.

புதிய நிறுவனத்தின் நோக்கம் குறித்து சுஷில் லால்வானி கூறும்போது, “வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன், நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது நிறுவனத்தின் முக்கிய நோக்கம். 

சொத்து வாங்குவது என்பது பல ஆண்டுகால உழைப்பையும் குடும்பத்தின் எதிர்காலக் கனவுகளையும் உள்ளடக்கியது என்பதால், திட்டமிடல் முதல் திட்டங்களை ஒப்படைப்பது வரை வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.

முந்தைய செய்தி
பங்குச் சந்தை வீழ்ச்சியை விடப் பெரிய ஆபத்து
அடுத்த செய்தி
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பொதுமக்கள்

தொடர்புடைய செய்திகள்